கப்டன் சேதுசா அவர்கள் கிரான், மட்டக்களப்பைச் சேர்ந்தவர். பொன்னையா வேதநாயகி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 4 டிசம்பர் 1997 அன்று வவுனியா மாவட்டம் மன்னக்குளப் பகுதியில் முன்னேறிய ஜெயசிக்குறு சிறிலங்கா படையினர் மீதான ஊடறுப்புத் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஒடுக்கப்படும் மானிடத்தின் விடுதலையை நோக்கிய பயணமாகவே மனித வரலாறு நகர்கிறது. ஒடுக்கப்படும் சமுதாயங்கிளிலிருந்தே வரலாறு படைக்கும் சக்திபெற்ற அபூர்வ மனிதர்கள் பிறக்கிறார்கள். எமது சமூகத்திற் பிறந்த அந்த அந்த அபூர்வ மனிதர்கள்தான் எமது மாவீரர்கள்.