கட்டுநாயக்க வான்படைத்தளத் தாக்குதல்

கட்டுநாயக்க வான்படைத்தளத் தாக்குதலில் காவியமான 14 மறைமுகக் கரும்புலிகளின் விபரம்

24.07.2001 அன்று கட்டுநாயக்க சிறிலங்கா வான்படைத்தளம் மற்றும் பன்னாட்டு வானூர்தி நிலையம் என்பவற்றின் மீது சிறப்பு நடவடிக்கை கரும்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதலில் சிறிலங்கா வான்படைக் கலங்கள் மற்றும் போக்குவரத்து வானூர்திகள் உட்பட 26 வானூர்திகள் முற்றாக அழிந்து அல்லது சேதமாகின.

14 சிறப்பு நடவடிக்கைக் கரும்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த வெற்றிகரத் தாக்குதலில் 4 - கிபிர் குண்டு வீச்சு வானூர்திகள், 2 - மிக் 27 ரக குண்டு வீச்சு வானூர்திகள், 3 - கே-8 ரக பயிற்சி வானூர்திகள், 2 - பெல் - 412 ரக உலங்கு வானூர்திகள், 2 - பெல் - 412 ரக (விவிஐபி) உலங்கு வானூர்திகள், 3 - போக்குவரத்து வானூர்திகள் என்பன முற்றாக அழிக்கப்பட்டன.  4 - கிபிர் வானூர்திகள், 1 - எம்.ஐ. உலங்கு வானூர்தி, 1 - அன்ரனொவ் படை போக்குவரத்து வானூர்தி, 1 - பெல் - 412 ரக உலங்கு வானூர்தி, 3 - போக்குவரத்து வானூர்திகள் என்பன கடுமையாக சேதப்படுத்தப்பட்டன.

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னூர்களை ஈகம் செய்த இந்த 14 சிறப்பு நடவடிக்கை கரும்புலிகளை எமது நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

இதுவரை மறைமுகங்களாக இருந்த இவர்களின் ஒளிப்படங்களையும் பெயர்களையும் வெளிக்காட்டிய உள்ளங்களிற்கு எமது நன்றிகள்.

Results 1 - 14 of 14

Image
  • www.veeravengaikal.com
  • info@veeravengaikal.com

மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும்.

பின்தொடர்க..