கப்டன் சீத்தா அவர்கள் பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். நவரத்தினம் சாந்தி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 10 ஜூன் 1997 அன்று வவுனியா மாவட்டம் தாண்டிக்குளப் பகுதியில் அமைந்திருந்த ஜெயசிக்குறு நடவடிக்கைக்கான வழங்கற் தளம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
மக்களின் விடுதலையென்ற மகத்தான இலட்சியத்தை வரித்து அந்த இலட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த இலட்சியத்தை அடைய உறுதிதளராது போராடி அந்த இலட்சியப் போரில் தமது உயிரையே அர்ப்பணித்த மாவீரர்கள் மகோன்னதமான மனிதப்பிறவிகள்.