கப்டன் பிரதீபவர்மன் (குபேந்திரன்) அவர்கள் பண்டாரியாவெளி, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். சிவஞானசெல்வம் கணபதிப்பிள்ளை என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 10 ஜூன் 1997 அன்று வவுனியா மாவட்டம் தாண்டிக்குளப் பகுதியில் அமைந்திருந்த ஜெயசிக்குறு நடவடிக்கைக்கான வழங்கற் தளம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
நீண்டதும், கடினமனதும், அபாயகரமானதுமான இந்த யுத்தங்களில் எமது விடுதலை வீரர்கள் சந்தித்த இன்னல்களை இடையூறுகளை, துன்பங்களை எழுத்தில் விபரிக்க முடியாது. இரும்பையொத்த இலட்சிய உறுதியுடன், எதையும் தாங்கும் இதயத்துடன், சாவுக்கு அஞ்சாத வீரத்துடன் எமது வீரர்கள் போராடினர்கள். போர்க்களத்தில் வீரமரணத்தைத் தழுவினார்கள்.