லெப்டினன்ட் வானதி அவர்கள் உருத்திரபுரம், கிளிநொச்சியைச் சேர்ந்தவர். கந்தசாமி காந்திமதி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 15 மே 1997 அன்று வவுனியா மாவட்டம் நெடுங்கேணிப் பகுதியில் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மண் நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண். எமது மூதாதையோரின் பாதச்சுவடுகள் பதிந்த மண். எமது பண்பாடும் வரலாறும் வேர்பதிந்து நிற்கும் மண் எமக்கே சொந்தமாக வேண்டும் என்ற குறிக்கோளுக்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.