லெப்டினன்ட் ஜெயசுதன் அவர்கள் இரத்தினபுரம், கிளிநொச்சியைச் சேர்ந்தவர். சண்முகராசா சுதாகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 29 செப்டம்பர் 1996 அன்று கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் பகுதியிலிருந்து முன்னகர முயன்ற சிறிலங்கா படையினருக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
உலக வரலாற்றில் எங்குமே, எப்பொழுதுமே நிழந்திராத அற்புதமான தியாகங்கள் இந்த மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன. மனித ஈகத்தின் உச்சங்களை எமது போராட்ட வரலாறு தொட்டுநிற்கிறது. இந்த மகோன்னதமான தியாக வரலாற்றைப் படைத்தவர்கள் எமது மாவீரர்கள்.