வீரவேங்கை திரையன் அவர்கள் வட்டுக்கோட்டை மேற்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். அருணகிரிநாதன் கதிரழகன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 28 செப்டம்பர் 1996 அன்று கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் பகுதியிலிருந்து முன்னகர முயன்ற சிறிலங்கா படையினருக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
மக்களின் விடுதலையென்ற மகத்தான இலட்சியத்தை வரித்து அந்த இலட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த இலட்சியத்தை அடைய உறுதிதளராது போராடி அந்த இலட்சியப் போரில் தமது உயிரையே அர்ப்பணித்த மாவீரர்கள் மகோன்னதமான மனிதப்பிறவிகள்.