2-ஆம் லெப்டினன்ட் கண்ணபிரான் அவர்கள் கோண்டாவில் மேற்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். இரத்தினசிங்கம் நவயுகன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் நடவடிக்கையின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது 22 ஜூலை 1996 அன்று வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
விடுதலை என்பது ஒரு அக்கினிப் பிரவேசம்; நெருப்பு நதிகளை நீந்திக் கடக்கும் நீண்ட பயணம்; தியாகத்தின் தீயில் குதிக்கும் யாகம். இந்த விடுதலை வேள்விக்கு தமது உயிரை ஈகம் செய்தவர்கள் மாவீரர்கள்.