வீரவேங்கை நிலவழவன் அவர்கள் பாவற்காடு, அக்கரைப்பற்று, அம்பாறையைச் சேர்ந்தவர். பிள்ளையான் யோகராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 18 ஜூலை 1996 அன்று முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது தாயக தேசத்தின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் புலி வீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள். எமது வீர மண்ணின் மார்பைப் பிளந்து அந்த வீரர்களைப் புதைத்தோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள் மண்ணிற்குள் மறையவில்லை. விடுதலையின் விதைகளாகவே எமது தாயின் மடியில் அவர்களைப் புதைத்தோம்.