வீரவேங்கை சேது அவர்கள் கரணவாய் வடக்கு, கரவெட்டி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கிருஸ்ணபிள்ளை செல்வறஞ்சன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 22 ஏப்ரல் 1996 அன்று யாழ். மாவட்டம் தென்மராட்சி கோட்டத்தை கைப்பற்ற மேற்கொள்ளப்பட்ட சூரியகதிர் 2 நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஒரு சத்திய இலட்சியத்திற்காக தம் இன்னுயிரை ஈகம் செய்த எம் இனிய வீரர்களை இன்று நாம் எமது நெஞ்சப் பசுமையில் நினைவு கூர்ந்து கௌரவிப்போம். அவர்களது வீரத்திற்கும், அதியுயர்ந்த தியாகத்திற்கும் தலைகுனிந்து வணக்கம் தெரிவிப்போம்.