கடற்கரும்புலி கப்டன் விக்கி அவர்கள் தாளையடி, மருதங்கேணி வடக்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். இராசரத்தினம் சுமதி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 12 ஏப்ரல் 1996 அன்று கொழும்புத் துறைமுகத்தில் வைத்து கடற்படை கலங்கள் மற்றும் வணிக கப்பல்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்களது அற்புதமான இலட்சிய வாழ்க்கை, அவர்களது தியாகங்கள், அவர்கள் அனுபவித்த துன்ப துயரங்கள், ஏக்கங்கள், அவர்கள் கண்ட கனவுகள் இவை எல்லாவற்றினதும் ஒட்டுமொத்த வெளிப்பாடகவே எமது போராட்ட வரலாறு முன்னேறிச் செல்கின்றது. எமது வீர சுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால், வியர்வையால், கண்ணீரால் எழுதப்பட்டது.