2-ஆம் லெப்டினன்ட் ஈழச்செல்வன் அவர்கள் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அன்ரனி லோறன்ஸ் கமல் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 15 மார்ச் 1996 அன்று மன்னார் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது தாயக தேசத்தின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் புலி வீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள். எமது வீர மண்ணின் மார்பைப் பிளந்து அந்த வீரர்களைப் புதைத்தோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள் மண்ணிற்குள் மறையவில்லை. விடுதலையின் விதைகளாகவே எமது தாயின் மடியில் அவர்களைப் புதைத்தோம்.