2-ஆம் லெப்டினன்ட் காளிதாஸ் அவர்கள் கள்ளியடி, இலுப்பைக்கடவை, மன்னாரைச் சேர்ந்தவர். ஞானப்பிரகாசம் சரவணபவன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 15 மார்ச் 1996 அன்று மன்னார் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது வீர சுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டிருக்கிறது. இவர்களது இறப்புக்கள் அர்த்தமற்ற இறப்புக்கள் அல்ல. இந்த வீரர்களின் சாவுகள் எமது சரித்திரத்தையே இயக்கும் உந்து சக்தியாக, எமது போராட்டத்தின் உயிர்மூச்சாக எமது போராளிகளின் உறுதிக்கு உத்வேகமளிக்கும் ஊக்குசக்தியாக அமைந்துவிட்டது.