2-ஆம் லெப்டினன்ட் ஜீவானந்தன் அவர்கள் எழுத்தூர், மன்னாரைச் சேர்ந்தவர். சந்தியோகு யூட்செல்வன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 15 மார்ச் 1996 அன்று மன்னார் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு ஒரு சாதாரண சாவு நிகழ்வு அல்ல. எமது தேச விடுதலையின் ஆன்மீக அறைகூவலாகவே மாவீரர்களது மரணம் நிகழ்கின்றது. எமக்கு ஒரு நாடு வேண்டும் என்ற ஆக்ரோசமான இலட்சிய வேட்கையுடனேயே மாவீரர்கள் களத்தில் வீழ்கின்றார்கள்.