கப்டன் மாறன் (வர்மன்) அவர்கள் அளவெட்டி தெற்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். முருகையா முருகதாஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 14 நவம்பர் 1995 அன்று யாழ். மாவட்டம் வலிகாமம் கோட்டத்தில் சூரியகதிர் படை நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
நீண்டதும், கடினமனதும், அபாயகரமானதுமான இந்த யுத்தங்களில் எமது விடுதலை வீரர்கள் சந்தித்த இன்னல்களை இடையூறுகளை, துன்பங்களை எழுத்தில் விபரிக்க முடியாது. இரும்பையொத்த இலட்சிய உறுதியுடன், எதையும் தாங்கும் இதயத்துடன், சாவுக்கு அஞ்சாத வீரத்துடன் எமது வீரர்கள் போராடினர்கள். போர்க்களத்தில் வீரமரணத்தைத் தழுவினார்கள்.