லெப்டினன்ட் தவக்குமார் அவர்கள் முள்ளியான், வெற்றிலைக்கேணி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சோமசுந்தரம் பாக்கியராஜா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 5 அக்டோபர் 1987 அன்று யாழ். மாவட்டம் பலாலி இந்தியப் படையினர் முகாமில் இந்திய - சிறிலங்கா கூட்டுச்சதியை அம்பலப்படுத்துவதற்காக சயனைட் உட்கொண்டு வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
சுயவாழ்வின் சுகபோகங்களைக் கைவிட்டு பொதுவாழ்வின் அதியுயர் விழுமியத்தைத் தழுவிக்கொள்கிறார்கள். அந்தப் பொதுவான இலட்சியத்திற்காக தமது சொந்த வாழ்வையும் அர்ப்பணிக்கத் துணிகிறார்கள் இதனை ஒரு புனிதமான துறவறமாகவே நான் கருதுகிறேன். இந்தப் புனிதத் துறவறத்திற்கு இலக்கணமாக விளங்கும் மாவீரர்களை நாம் புனிதர்களாகவே பூசிக்க வேண்டும்.