லெப்.கேணல் குமரப்பா அவர்கள் ரேவடி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். பாலசுந்தரம் இரத்தினபாலன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் மட்டு-அம்பாறை மாவட்ட தளபதியாகவும் யாழ். மாவட்ட தளபதியாகவும் கடமையாற்றினார். 5 அக்டோபர் 1987 அன்று யாழ். மாவட்டம் பலாலி இந்தியப் படையினர் முகாமில் இந்திய - சிறிலங்கா கூட்டுச்சதியை அம்பலப்படுத்துவதற்காக சயனைட் உட்கொண்டு வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
இந்த நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சிகளாகவே எமக்குக் காட்சி தருகின்றன.
இந்த மாவீரரின் முழு விவரங்கள்
சேவை விவரங்கள்
நிலை
லெப்.கேணல்
இயக்கப் பெயர்
குமரப்பா
பொறுப்பு
மட்டு-அம்பாறை மாவட்ட தளபதியும் யாழ். மாவட்ட தளபதியும்