2-ஆம் லெப்டினன்ட் அருள்நாதன் அவர்கள் களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். சோமு துரைசிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 அக்டோபர் 1995 அன்று யாழ். மாவட்டம் அச்சுவேலிப் பகுதியில் முன்னகர்ந்து நிலை கொண்டிருந்த சிறிலங்கா படையினர் மீதான ஊடறுப்புத் தாக்குதலின் போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மண் நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண். எமது மூதாதையோரின் பாதச்சுவடுகள் பதிந்த மண். எமது பண்பாடும் வரலாறும் வேர்பதிந்து நிற்கும் மண் எமக்கே சொந்தமாக வேண்டும் என்ற குறிக்கோளுக்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.