லெப்டினன்ட் தென்னவன் (ராஜ்) அவர்கள் கிளாலி, எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். மரியநாயகம் ரூபநாயகம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 அக்டோபர் 1995 அன்று யாழ். மாவட்டம் அச்சுவேலிப் பகுதியில் முன்னகர்ந்து நிலை கொண்டிருந்த சிறிலங்கா படையினர் மீதான ஊடறுப்புத் தாக்குதலின் போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஒடுக்கப்படும் மானிடத்தின் விடுதலையை நோக்கிய பயணமாகவே மனித வரலாறு நகர்கிறது. ஒடுக்கப்படும் சமுதாயங்கிளிலிருந்தே வரலாறு படைக்கும் சக்திபெற்ற அபூர்வ மனிதர்கள் பிறக்கிறார்கள். எமது சமூகத்திற் பிறந்த அந்த அந்த அபூர்வ மனிதர்கள்தான் எமது மாவீரர்கள்.