மேஜர் நளன் (கிறேசன்) அவர்கள் ஆசிரியர் சதுக்கம், உவர்மலை, திருகோணமலையைச் சேர்ந்தவர். அண்ணாமலை சிறிகாந்தன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 14 ஜூலை 1995 அன்று முன்னேறிப் பாய்தல் நடவடிக்கையில் முன்னகர்ந்து சண்டிலிப்பாய் - அளவெட்டிப் பகுதிகளில் நிலைகொண்டிருந்த சிறிலங்கா படையினர் மீதான புலிப்பாய்ச்சல் நடவடிக்கையின் போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
முன்னேறிப் பாய்தல் நடவடிக்கையில் முன்னகர்ந்து சண்டிலிப்பாய் - அளவெட்டிப் பகுதிகளில் நிலைகொண்டிருந்த சிறிலங்கா படையினர் மீதான புலிப்பாய்ச்சல் நடவடிக்கையின் போது வீரச்சாவு.
எமது வீர சுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டிருக்கிறது. இவர்களது இறப்புக்கள் அர்த்தமற்ற இறப்புக்கள் அல்ல. இந்த வீரர்களின் சாவுகள் எமது சரித்திரத்தையே இயக்கும் உந்து சக்தியாக, எமது போராட்டத்தின் உயிர்மூச்சாக எமது போராளிகளின் உறுதிக்கு உத்வேகமளிக்கும் ஊக்குசக்தியாக அமைந்துவிட்டது.