கப்டன் சிந்துஜன் (சிந்து) அவர்கள் பொலநறுவை மாவட்டத்தைச் சேர்ந்தவர். புண்ணியமூர்த்தி கணேசமூர்த்தி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 10 ஜூலை 1995 அன்று யாழ். மாவட்டம் சண்டிலிப்பாய் நோக்கி முன்னேறிய சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
நீண்டதும், கடினமனதும், அபாயகரமானதுமான இந்த யுத்தங்களில் எமது விடுதலை வீரர்கள் சந்தித்த இன்னல்களை இடையூறுகளை, துன்பங்களை எழுத்தில் விபரிக்க முடியாது. இரும்பையொத்த இலட்சிய உறுதியுடன், எதையும் தாங்கும் இதயத்துடன், சாவுக்கு அஞ்சாத வீரத்துடன் எமது வீரர்கள் போராடினர்கள். போர்க்களத்தில் வீரமரணத்தைத் தழுவினார்கள்.