லெப்டினன்ட் சிங்கராசா அவர்கள் களுதாவளை, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். பரசுராமன் பகீரதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 10 ஜூலை 1995 அன்று யாழ். மாவட்டம் சண்டிலிப்பாய் நோக்கி முன்னேறிய சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்களது அற்புதமான இலட்சிய வாழ்க்கை, அவர்களது தியாகங்கள், அவர்கள் அனுபவித்த துன்ப துயரங்கள், ஏக்கங்கள், அவர்கள் கண்ட கனவுகள் இவை எல்லாவற்றினதும் ஒட்டுமொத்த வெளிப்பாடகவே எமது போராட்ட வரலாறு முன்னேறிச் செல்கின்றது. எமது வீர சுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால், வியர்வையால், கண்ணீரால் எழுதப்பட்டது.