வீரவேங்கை காலத்தன் (கலாதீபன்) அவர்கள் 10-ஆம் வீட்டுத்திட்டம், கொக்குவில், மட்டக்களப்பைச் சேர்ந்தவர். சுப்பிரமணியம் உமாகாந்தன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 13 மே 1995 அன்று மட்டக்களப்பு மாவட்டம் வாகரை குஞ்சங்குளம் பகுதிக்கு வந்த சிறிலங்கா படையினர் மீதான தாக்குதல் முயற்சியின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஈடிணையற்ற ஈகங்கள் புரிந்து, அளப்பரிய அர்ப்பணிப்புக்கள் செய்து, எண்ணற்ற சாதனைகள் புரிந்து எமது தேசத்தின் வரலாற்றுச் சக்கரத்தை விடுதலையின் பாதையில் விரைவாக அசைத்துச் செல்பவர்கள் எமது மாவீரர்களே.