வீரவேங்கை விக்கிரமன் (நிக்சன்) அவர்கள் கிரான், மட்டக்களப்பைச் சேர்ந்தவர். குலசேகரம் கணேஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 6 மே 1995 அன்று மட்டக்களப்பு மாவட்டம் திகிலிவெட்டைப் பகுதியில் சுற்றிவளைக்க முயன்ற சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஒரு சத்திய இலட்சியத்திற்காக தம் இன்னுயிரை ஈகம் செய்த எம் இனிய வீரர்களை இன்று நாம் எமது நெஞ்சப் பசுமையில் நினைவு கூர்ந்து கௌரவிப்போம். அவர்களது வீரத்திற்கும், அதியுயர்ந்த தியாகத்திற்கும் தலைகுனிந்து வணக்கம் தெரிவிப்போம்.