லெப்டினன்ட் ஈகவரசன் (தியாகு) அவர்கள் சில்லாலை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். இராசேந்திரன் யோகநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 29 செப்டம்பர் 1993 அன்று கிளிநொச்சி மாவட்டம் புலோப்பளைப் பகுதியில் யாழ்தேவி படை நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
சுயவாழ்வின் சுகபோகங்களைக் கைவிட்டு பொதுவாழ்வின் அதியுயர் விழுமியத்தைத் தழுவிக்கொள்கிறார்கள். அந்தப் பொதுவான இலட்சியத்திற்காக தமது சொந்த வாழ்வையும் அர்ப்பணிக்கத் துணிகிறார்கள் இதனை ஒரு புனிதமான துறவறமாகவே நான் கருதுகிறேன். இந்தப் புனிதத் துறவறத்திற்கு இலக்கணமாக விளங்கும் மாவீரர்களை நாம் புனிதர்களாகவே பூசிக்க வேண்டும்.