மேஜர் தமிழரசன் (டொச்சன்) அவர்கள் உரும்பிராய், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கந்தசாமி ஜெயக்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 24 நவம்பர் 1992 அன்று யாழ். மாவட்டம் தொண்டமனாறு முதல் ஒட்டகப்புலம் வரை அமைந்திருந்த சிறிலங்கா படையினரின் 150 காவலரண்கள் தாக்கியழிக்கப்பட்ட சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
சுயவாழ்வின் சுகபோகங்களைக் கைவிட்டு பொதுவாழ்வின் அதியுயர் விழுமியத்தைத் தழுவிக்கொள்கிறார்கள். அந்தப் பொதுவான இலட்சியத்திற்காக தமது சொந்த வாழ்வையும் அர்ப்பணிக்கத் துணிகிறார்கள் இதனை ஒரு புனிதமான துறவறமாகவே நான் கருதுகிறேன். இந்தப் புனிதத் துறவறத்திற்கு இலக்கணமாக விளங்கும் மாவீரர்களை நாம் புனிதர்களாகவே பூசிக்க வேண்டும்.