லெப்டினன்ட் லிங்கம் (ரமணலிங்கம்) அவர்கள் கம்பர்மலை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். இராசேந்திரம் பாஸ்கரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 24 நவம்பர் 1992 அன்று யாழ். மாவட்டம் தொண்டமனாறு முதல் ஒட்டகப்புலம் வரை அமைந்திருந்த சிறிலங்கா படையினரின் 150 காவலரண்கள் தாக்கியழிக்கப்பட்ட சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்களைப் புனிதர்களாகவே நான் கௌரவிக்கிறேன். தாய் நாட்டின் விடுதலையென்ற பொதுமையான பற்றுணர்வால் ஈர்க்கப்படும் அவர்கள், தமது தனிமையான பற்றுக்களையும் பாசவுறவுகளையும் துறந்துவிடுகிறார்கள்.