வீரவேங்கை நெடியவன் (வாசன்) அவர்கள் புதுக்குடியிருப்பு, தம்பலகாமம், திருகோணமலையைச் சேர்ந்தவர். இரட்ணம் சுதாகர் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 30 மே 1992 அன்று யாழ். மாவட்டம் வீமன்காமப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மண் நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண். எமது மூதாதையோரின் பாதச்சுவடுகள் பதிந்த மண். எமது பண்பாடும் வரலாறும் வேர்பதிந்து நிற்கும் மண் எமக்கே சொந்தமாக வேண்டும் என்ற குறிக்கோளுக்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.