கப்டன் பாவாணன் (கெனடி) அவர்கள் புன்னாலைக்கட்டுவன் தெற்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். பத்மநாதன் மயூரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 30 மே 1992 அன்று யாழ். மாவட்டம் வீமன்காமப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
தன்னலமற்ற, தமக்கெனப் பயனை எதிர்பாராத விடுதலைத் தொண்டில், தம்மையே அழித்துக்கொள்ளும் அதியுன்னத தியாகிகள் என்பதால், மாவீரர்களுக்கு எமது விடுதலை இயக்கம் பெரும் மதிப்பையும் கௌரவத்தையும் வழங்கிவருகிறது.