வீரவேங்கை யூட்டி அவர்கள் உடுத்துறை வடக்கு, தாளையடி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். இராசரத்தினம் ஜெயதேவி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 14 செப்டம்பர் 1991 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு கோட்டத்தில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது தாயக தேசத்தின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் புலி வீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள். எமது வீர மண்ணின் மார்பைப் பிளந்து அந்த வீரர்களைப் புதைத்தோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள் மண்ணிற்குள் மறையவில்லை. விடுதலையின் விதைகளாகவே எமது தாயின் மடியில் அவர்களைப் புதைத்தோம்.