வீரவேங்கை சியாம் (ஜியாப்) அவர்கள் பருத்தித்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். அந்தோனிப்பிள்ளை யேசுராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 18 ஜூன் 1986 அன்று தமிழீழக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படை மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
மரணத்தின் பின்னாலும் மாவீரர்களது வாழ்வு தொடர்கிறது. சாவோடு அவர்களது வாழ்வு அடங்கிப்போகவில்லை. அவர்கள் தமிழன்னையின் கருவூலத்தில் நித்திய வாழ்வு வாழ்கிறார்கள். சத்தியத்தின் சாட்சியாக நின்று, மனவலிமையின் நெருப்பாக எரிந்து, எம்மைச் சுதந்திரப் பாதையில் வழிகாட்டி, நெறிப்படுத்திச் செல்கிறார்கள்.