மேஜர் ரஞ்சன் (சித்தப்பா) அவர்கள் தம்பசிட்டி, பருத்தித்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். செல்வநாயகம் தயாளன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் வடமராட்சி தாக்குதல் தளபதியாகக் கடமையாற்றினார். 20 மார்ச் 1991 அன்று மன்னார் மாவட்டம் சிலாவத்துறை சிறிலங்கா படை முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
மரணத்தின் பின்னாலும் மாவீரர்களது வாழ்வு தொடர்கிறது. சாவோடு அவர்களது வாழ்வு அடங்கிப்போகவில்லை. அவர்கள் தமிழன்னையின் கருவூலத்தில் நித்திய வாழ்வு வாழ்கிறார்கள். சத்தியத்தின் சாட்சியாக நின்று, மனவலிமையின் நெருப்பாக எரிந்து, எம்மைச் சுதந்திரப் பாதையில் வழிகாட்டி, நெறிப்படுத்திச் செல்கிறார்கள்.