2-ஆம் லெப்டினன்ட் மணி அவர்கள் சந்திவெளி, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். கந்தையா சேனாதிராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 14 மார்ச் 1991 அன்று மட்டக்களப்பு மாவட்டம் முறக்கொட்டாஞ்சேனைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது தாயக தேசத்தின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் புலி வீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள். எமது வீர மண்ணின் மார்பைப் பிளந்து அந்த வீரர்களைப் புதைத்தோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள் மண்ணிற்குள் மறையவில்லை. விடுதலையின் விதைகளாகவே எமது தாயின் மடியில் அவர்களைப் புதைத்தோம்.