2-ஆம் லெப்டினன்ட் சுகந்தன் அவர்கள் கள்ளப்பாடு, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். இராசரட்ணம் சிவனேந்திரராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 19 அக்டோபர் 1990 அன்று யாழ். மாவட்டம் வசாவிளான் பகுதியில் சிறிலங்கா படையினரின் ஜெயசக்தி நடவடிக்கைக்கு எதிரான 3-ஆம் நாள் சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
இந்த நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சிகளாகவே எமக்குக் காட்சி தருகின்றன.