2-ஆம் லெப்டினன்ட் ஐயர் (ராஜ்) அவர்கள் புத்தூர் மேற்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். பாலசுப்பிரமணியசர்மா சுந்தரராஜசர்மா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 17 அக்டோபர் 1990 அன்று யாழ். மாவட்டம் வசாவிளான் பகுதியில் சிறிலங்கா படையினரின் ஜெயசக்தி நடவடிக்கைக்கு எதிரான சமரின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
இந்த மாவீரர்கள் காலத்தால் சாகாத சிரஞ்சீவிகள், சுதந்திரச் சிற்பிகள், எமது மண்ணிலே ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள். எமது இனத்தின் சுதந்திரத்திற்காக, பாதுகாப்பிற்காக தமது இன்னுயிரை அர்ப்பணித்துள்ள இந்த மகத்தான தியாகிகள் காலம் காலாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்.