வீரவேங்கை சுந்தர் அவர்கள் 5-ஆம் வட்டாரம், சம்பூர், திருகோணமலையைச் சேர்ந்தவர். சித்திரவேல் கஜேந்திரராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1 செப்டம்பர் 1990 அன்று முல்லைத்தீவுப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற நேரடிச் சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
விடுதலை என்பது வாழ்வின் அதியுயர்ந்த விழுமியம். அந்த விழுமியத்தை இலட்சியமாக வரித்து, அதற்காக வாழ்ந்து, அதற்காகப் போராடி, அதற்காக மடிந்த எமது மாவீரர்கள் மகத்தான மனிதப் பிறவிகள். அவர்களது வாழ்வும் வரலாறும் எமது வீர விடுதலைக் காவியத்தின் உயிர் வரிகள்.