வீரவேங்கை சூட்டி அவர்கள் கொடிகாம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கணபதிப்பிள்ளை யோகேந்திரராஜா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 25 ஆகஸ்ட் 1990 அன்று யாழ். மாவட்டம் மண்டைதீவுப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது மாவீரர்கள் இந்த மண்ணுக்காக மடிந்தார்கள். இந்த மண்ணின் விடிவிற்காக மடிந்தார்கள். எமது மண்ணில் எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமென்ற இலட்சியத்திற்காக மடிந்தார்கள்.