மேஜர் தமிழீழன் அவர்கள் மகிழவெட்டுவான், ஆயித்தியமலை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். சதாசிவம் திருக்கேதீஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 7 ஏப்ரல் 2004 அன்று மட்டக்களப்பு மாவட்டம் கதிரவெளிப் பகுதியில் கருணா கும்பலுடன் ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த மாவீரரின் முழு விவரங்கள்
சேவை விவரங்கள்
நிலை
மேஜர்
இயக்கப் பெயர்
தமிழீழன்
படையணி / துறை
புலனாய்வுத்துறை
தனிப்பட்ட விவரங்கள்
இயற்பெயர்
சதாசிவம் திருக்கேதீஸ்வரன்
சொந்த இடம்
மகிழவெட்டுவான், ஆயித்தியமலை
மாவட்டம்
மட்டக்களப்பு
பால்
ஆண்
பிறந்த நாள்
02.12.1980
வீரச்சாவு நிகழ்வு விவரங்கள்
வீரச்சாவு நாள்
07.04.2004
நிகழ்வு மாவட்டம்
மட்டக்களப்பு
நிகழ்வு
மட்டக்களப்பு மாவட்டம் கதிரவெளிப் பகுதியில் கருணா கும்பலுடன் ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவு.
மட்டு மகிழவெட்டுவான் மகாவித்தியாலயத்தில் படிப்பைத் தொடர்ந்து கொண்டிருந்த வேளையில் 1995ஆம் ஆண்டு தன்னை விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டார். இவர் மறைமுகப் போராளியாக வெளியகப் பகுதியில் தனது பணிகளைச் செய்துகொண்டிருந்த வேளையில் கண்டியில் வைத்து சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு பின்னர் சிறிலங்கா புலனாய்வுத் துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்ட்டு கண்டிபிலுள்ள சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்து பின்னர் விடுதலை செய்யப்பட்டார். இதன் பின்னர் கேணல் சாள்ஸ் ( அருள்வேந்தன்) அவர்களின் வழிகாட்டலின் கீழ் வன்னிப் பகுதியிலிருந்து தனது பணிகளைச் செய்துவந்துள்ளார். துரோகி கருணா பிரிந்து சென்றபோது தென்தமிழீழத்தில் தனது பணியைத் தொடர்ந்த இவர் கதிரவெளிப் பகுதியில் கருணா குழுவினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
மூல விவரங்கள்
விவர மூலம்
கோப்பு
பதிவு விபரங்கள்
தொடர்எண்
17481
பதிவு நாள்
2012-07-02 12:14:00
திருத்த நாள்
2026-04-07 23:51:00
திருத்தலுக்கான காரணம்
மேலதிக விபரம் சேர்ப்பு
திருத்தல் மூலம்
தரவு கிடைக்கவில்லை
“
இந்த மாவீரர்களை நான் கௌரவிக்கிறேன். அவர்களுக்கு சிரம் தாழ்த்தி வணக்கம் செலுத்துகிறேன். அவர்களது தியாகத்தையும், வீரத்தையும், விடுதலைப் பற்றையும் எண்ணிப் பார்க்கும்போது எனது உள்ளம் பெருமை கொள்கிறது.