வீரவேங்கை சுகந்தன் அவர்கள் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர். விஜயநாதன் ஹேமாங்கதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 13 ஜூன் 1990 அன்று திருகோணமலை மாவட்டம் உப்புவெளி 3-ஆம் கட்டை சிறிலங்கா காவல்துறை நிலையப் பகுதியில் நடைபெற்ற சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
தன்னலமற்ற, தமக்கெனப் பயனை எதிர்பாராத விடுதலைத் தொண்டில், தம்மையே அழித்துக்கொள்ளும் அதியுன்னத தியாகிகள் என்பதால், மாவீரர்களுக்கு எமது விடுதலை இயக்கம் பெரும் மதிப்பையும் கௌரவத்தையும் வழங்கிவருகிறது.