கடற்கரும்புலி மேஜர் றோசா அவர்கள் வாரிவளவு, காரைநகர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கணேசன் கற்புக்கரசி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 21 அக்டோபர் 2001 அன்று முல்லைத்தீவுக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் சுற்றுக்காவல் கலங்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது தாயக மண்ணை மீட்டெடுக்கும் புனிதப் போரில் எமது மாவீரர்கள் புரிந்த தியாகங்கள் மகத்தானவை. அவற்றைச் சொற்களால் செதுக்கிவிட முடியாது. உலக வரலாற்றில் எங்குமே, என்றுமே நிகழாத அற்புதங்கள் இந்த மண்ணில், இந்த மண்ணிற்காக நிகழ்ந்திருக்கிறது. அந்த வீரகாவியத்தைப் படைத்த ஆயிரமாயிரம் மாவீரரின் இலட்சியக்கனவு அவர்களது ஆன்மீக தாகம் என்றோ ஒரு நாள் நிறைவு பெறுவது திண்ணம்.