கப்டன் நாவலன் அவர்கள் சாவகச்சேரி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். குணபாலசிங்கம் சுதாகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 21 அக்டோபர் 2001 அன்று முல்லைத்தீவுக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தாம் தழுவிக்கொண்ட இலட்சியத்தைத் தமது உயிரிலும் மேலாக நேசித்தவர்கள். மக்களின் விடுதலையை தமது மானசீக இலட்சியமாக, வாழ்வின் உயரிய குறிக்கோளாக வரித்துக் கொண்டவர்கள். அந்த இலட்சியத்திற்காகவே மடிந்தவர்கள்.