கடற்கரும்புலி கப்டன் இளங்குயிலன் அவர்கள் முருங்கன், மன்னாரைச் சேர்ந்தவர். றோயல்இம்மனுவேல் பற்றிக்எட்மன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 21 அக்டோபர் 2001 அன்று தமிழீழக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்களைப் புனிதர்களாகவே நான் கௌரவிக்கிறேன். தாய் நாட்டின் விடுதலையென்ற பொதுமையான பற்றுணர்வால் ஈர்க்கப்படும் அவர்கள், தமது தனிமையான பற்றுக்களையும் பாசவுறவுகளையும் துறந்துவிடுகிறார்கள்.