வீரவேங்கை றோகன் (குகன்) அவர்கள் இருபாலை கிழக்கு, கோப்பாய், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். வீரகத்திப்பிள்ளை குகதாசன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 8 ஏப்ரல் 1990 அன்று வவுனியா மாவட்டம் மாமடு முகாமிலிருந்து வெளியேறிய சிறிலங்கா படையினருடன் விளாத்திக்குளத்தில் நடைபெற்ற நேரடிச் சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.