லெப்டினன்ட் கில்பேட் அவர்கள் சாம்பல்தீவு, திருகோணமலையைச் சேர்ந்தவர். குவாநாட் கொன்ஸ்ரன் ரைன்ஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 6 பிப்ரவரி 1990 அன்று திருகோணமலை மாவட்டம் ஜமாலியாப் பகுதியில் அமைந்திருந்த ஈ.என்.டி.எல்.எவ் கும்பலின் முகாமைத் தாக்கிவிட்டு தளம் திரும்பும்போது ஏற்பட்ட படகு விபத்தில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
திருகோணமலை மாவட்டம் ஜமாலியாப் பகுதியில் அமைந்திருந்த ஈ.என்.டி.எல்.எவ் கும்பலின் முகாமைத் தாக்கிவிட்டு தளம் திரும்பும்போது ஏற்பட்ட படகு விபத்தில் வீரச்சாவு.
நீண்டதும், கடினமனதும், அபாயகரமானதுமான இந்த யுத்தங்களில் எமது விடுதலை வீரர்கள் சந்தித்த இன்னல்களை இடையூறுகளை, துன்பங்களை எழுத்தில் விபரிக்க முடியாது. இரும்பையொத்த இலட்சிய உறுதியுடன், எதையும் தாங்கும் இதயத்துடன், சாவுக்கு அஞ்சாத வீரத்துடன் எமது வீரர்கள் போராடினர்கள். போர்க்களத்தில் வீரமரணத்தைத் தழுவினார்கள்.