மேஜர் தாயகன் அவர்கள் மயிலங்காடு, ஏழாலை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். பரமானந்தவடிவேல் சசிக்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 16 ஏப்ரல் 2000 அன்று மன்னார் மாவட்டம் பேசாலைப் பகுதியில் பயிற்சியின்போது ஏற்பட்ட வெடிவபத்தில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மண் நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண். எமது மூதாதையோரின் பாதச்சுவடுகள் பதிந்த மண். எமது பண்பாடும் வரலாறும் வேர்பதிந்து நிற்கும் மண் எமக்கே சொந்தமாக வேண்டும் என்ற குறிக்கோளுக்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.