கப்டன் செல்வகாந்தன் அவர்கள் நாவற்குடா பிரிவு, பழுகாமம், மட்டக்களப்பைச் சேர்ந்தவர். இரத்தினசிங்கம் சற்குணராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 7 ஏப்ரல் 2000 அன்று மட்டக்களப்பு மாவட்டம் தம்பின்னப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
உலக வரலாற்றில் எங்குமே, எப்பொழுதுமே நிழந்திராத அற்புதமான தியாகங்கள் இந்த மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன. மனித ஈகத்தின் உச்சங்களை எமது போராட்ட வரலாறு தொட்டுநிற்கிறது. இந்த மகோன்னதமான தியாக வரலாற்றைப் படைத்தவர்கள் எமது மாவீரர்கள்.