கரும்புலி மேஜர் தனுசன் அவர்கள் இறால்குழி, மூதூர், திருகோணமலையைச் சேர்ந்தவர். தங்கராசா இலங்கேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 27 மார்ச் 2000 அன்று கிளிநொச்சி மாவட்டம் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது பளைப் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படையினரின் பீரங்கித்தளம் தகர்ப்பின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது வீர சுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டிருக்கிறது. இவர்களது இறப்புக்கள் அர்த்தமற்ற இறப்புக்கள் அல்ல. இந்த வீரர்களின் சாவுகள் எமது சரித்திரத்தையே இயக்கும் உந்து சக்தியாக, எமது போராட்டத்தின் உயிர்மூச்சாக எமது போராளிகளின் உறுதிக்கு உத்வேகமளிக்கும் ஊக்குசக்தியாக அமைந்துவிட்டது.