கடற்கரும்புலி மேஜர் மதன் அவர்கள் மாவடிச்சேனை, மூதூர், திருகோணமலையைச் சேர்ந்தவர். சிதம்பரநாதம் சிவாஜிநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 12 மார்ச் 2000 அன்று யாழ். மாவட்டம் நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படையுடன் ஏற்பட்டநேரடி மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
உலக வரலாற்றில் எங்குமே, எப்பொழுதுமே நிழந்திராத அற்புதமான தியாகங்கள் இந்த மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன. மனித ஈகத்தின் உச்சங்களை எமது போராட்ட வரலாறு தொட்டுநிற்கிறது. இந்த மகோன்னதமான தியாக வரலாற்றைப் படைத்தவர்கள் எமது மாவீரர்கள்.