கப்டன் கடலரசன் அவர்கள் தம்பிலுவில், அம்பாறையைச் சேர்ந்தவர். மகேஸ்வரன் சுதாகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 7 நவம்பர் 1999 அன்று அம்பாறை மாவட்டம் உடும்பன்குளப் பகுதியில் யானை தாக்கி வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு ஒரு சாதாரண சாவு நிகழ்வு அல்ல. எமது தேச விடுதலையின் ஆன்மீக அறைகூவலாகவே மாவீரர்களது மரணம் நிகழ்கின்றது. எமக்கு ஒரு நாடு வேண்டும் என்ற ஆக்ரோசமான இலட்சிய வேட்கையுடனேயே மாவீரர்கள் களத்தில் வீழ்கின்றார்கள்.