2-ஆம் லெப்டினன்ட் குலோத்துங்கன் அவர்கள் 3-ஆம் குறிச்சி, மண்டூர், மட்டக்களப்பைச் சேர்ந்தவர். அழகையா சுந்தரராஜன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 8 ஜூலை 1999 அன்று மன்னார் மாவட்டம் பள்ளமடுப் பகுதியில் சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது வீர சுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டிருக்கிறது. இவர்களது இறப்புக்கள் அர்த்தமற்ற இறப்புக்கள் அல்ல. இந்த வீரர்களின் சாவுகள் எமது சரித்திரத்தையே இயக்கும் உந்து சக்தியாக, எமது போராட்டத்தின் உயிர்மூச்சாக எமது போராளிகளின் உறுதிக்கு உத்வேகமளிக்கும் ஊக்குசக்தியாக அமைந்துவிட்டது.